Saturday, August 21, 2010

புதிய திரைமணம்.காம்

தமிழ்மணம் இணையத்தளத்தை நடத்தி வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் (TMI Inc), மற்றொரு புதிய இணையத்தளத்தை தற்பொழுது வெளியிடுகிறது. திரைமணம் என்ற இந்தத் தளம் (http://www.thiraimanam.com/) வலைப்பதிவுகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த இடுகைகளைச் சார்ந்து இயங்கும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழ்மணம் திரைப்படம் தொடர்பான இடுகைகளைத் திரட்டி தமிழ்மணத்தின் ஓர் அங்கமாக வெளியிட்டு வந்திருக்கிறது. தமிழ்மணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள பதிவுகளின் எண்ணிக்கை எட்டாயிரத்தை எட்டவிருக்கும் இந்நேரம் தமிழ்மணம் முகப்பில் புதிய இடுகைகள் தோன்றுவது மிகச் சொற்ப நேரமே. அதனால் நல்ல பல இடுகைகள் வாசகர்களை சென்றடையாமலே மறைகின்றன என்ற மனக்குறையை பதிவர்கள் தொடர்ந்து எங்களுக்குத் தெரிவித்து வந்திருக்கின்றனர். இடுகைகளைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து தமிழ்மணத்தின் உள்பக்கங்களில் வெளியிடலாமென்றாலும் வாசகர்களில் பெரும்பாலோர் முகப்புப் பக்கத்தைத் தாண்டி பிற பக்கங்களுக்குச் செல்வதில்லை என்பதையே தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில் திரைப்படம் தொடர்பான இடுகைகள் அதிக அளவில் வரும் பல கால கட்டங்களில், குறிப்பாக பிரபலமான சில படங்கள் வெளியாகும் காலங்களில், மற்ற இடுகைகள் முற்றிலுமாக இருட்டடிப்புக்குள்ளாகின்றன. இச்சிக்கல்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு திரைப்பட இடுகைகளைத் தனியே திரட்டி "திரைமணம்" என்ற புதியதொரு தளத்தில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

திரைப்படங்களையும், பெரும்பான்மை மக்களையும் பிரிக்க முடியாத தமிழ்ச்சூழலில் திரைப்படங்கள் தொடர்பாகவும், திரைக்கலைஞர்களின் பிம்பங்களை ஒட்டியுமே பதிவுகள் எழுதப்படுவதும், அதிக அளவில் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதுவும் புரிந்து கொள்ள முடியாததல்ல. இந்தச் சூழலை மாற்ற வேண்டுமானால் கூட அதன் முதல் படி இத்தகைய சினிமா வியபார சூழலில் நல்ல திரைப்படங்களை வெற்றியடையச் செய்யத் தேவையான விழிப்புணர்வை அதிகரிப்பதில்தான் இருக்கிறது. திரைமணம் அந்தப் பாதையில் பயணிக்கும் என்று தமிழ் மீடியா இண்டர்நேசனல் நிர்வாகம் உறுதி அளிக்கிறது. அதன் ஆரம்பமாகத் தரமான படங்களை எந்த மொழியானாலும் முன்னிலைப் படுத்துவதையும், மாற்றுத் திரைப்படங்களையும், குறும்படங்களையும் தனி வெளிச்சம் காட்டி ஆதரிப்பதையும் திரைமணம் செய்யவிருக்கிறது. இதைத் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை அடையாளம் காட்டும் பதிவுகளை ஊக்குவிக்கவும் வேறு சில திட்டங்களை எதிர்காலத்தில் முன்வைக்க இருக்கிறது.

தமிழ்மணத்தின் அனைத்து வரையறுக்கப் பட்ட விதிகளும், பெருவாரியான பதிவர்களின்/வாசகர்களின் வேண்டுகோளை/நலனை மதித்து எடுக்கப் படும் கொள்கைகளும் திரைமணத்திலும் கடைபிடிக்கப் படும். பதிவர்களும், வாசகர்களும் தங்களது புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை தொடர்ந்து திரைமணத்துக்கும் வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

****************************

திரைமணம் செயல்படும் முறை

திரைமணத்திற்குப் பதிவர்கள் தங்கள் இடுகைகளைத் தனியாக சமர்ப்பிக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக தமிழ்மணத்தில் திரைப்படங்களைச் சார்ந்து எழுதப்படும் இடுகைகளை அதன் குறிச்சொற்களைக் கொண்டு திரைமணம் தானியங்கியாகத் திரட்டிக் கொள்ளும்.

அது போலவே திரைமணம், தமிழ்மணம் தளங்களின் வாக்களிப்பு முறை வெவ்வேறான தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இடைக்கால ஏற்பாடாக தமிழ்மணத்தின் வாக்குகள் திரைமணத்திலும் பிரதிபலிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைமணத்தின் வாக்குகளும், தமிழ்மணத்தின் வாக்குகளையும் கொண்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இது இடைக்கால ஏற்பாடு மட்டுமே.

திரைப்படங்களைச் சார்ந்த இடுகைகள் திரைமணத்தில் திரட்டப்படுவதால் திரைப்படம் சார்ந்த இடுகைகள் இனி தமிழ்மணம் முகப்பில் வெளியாகாமல் இருக்க தமிழ்மணம் முகப்பின் தொழில்நுட்பம் மாற்றப்படும்.

திரைமணத்தில் உறுப்பினராக இந்தச் சுட்டிக்குச் செல்லவும் - http://www.thiraimanam.com/register.php

இந்தப் புதிய ஏற்பாடுகள் வலைப்பதிவு வாசகர்களுக்கு ஒரு இனிமையான வலைப்பதிவு அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேசனல் (TMI Inc)


43 comments:

வினவு said...

நல்ல முடிவு, நன்றியும்,வாழ்த்துக்களும்!

அகல்விளக்கு said...

நல்ல முடிவு....

வாழ்த்துக்களும், நன்றியும்!

Jerry Eshananda said...

என் வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்..

செ.சரவணக்குமார் said...

மிகச் சிறந்த முடிவு.

நன்றியும் வாழ்த்துகளும்.

Anonymous said...

நல்ல முடிவு, வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

எந்திரனுக்கு ஆறாயிரம் விமர்சனப் பதிவுகள் வரும் என்ற கணிப்பு,

தனிப் பிரிவு தொடங்கியமைக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

இதே போல ஈழம், இலங்கை சார்ந்த செய்திகளுக்கும் தனிப் பிரிவு உருவாக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

உண்மைத்தமிழன் said...

நல்ல முடிவு.. என்னைப் போன்றவர்களுக்கான அக்கறையான நடவடிக்கை.. தமிழ்மணம் தூங்காமல் வேலை செய்கிறது.. ஒத்துக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

ராம்ஜி-யாஹூவின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்.. அதற்கும் ஒரு வழி செய்தால் நல்லது..!

விமலாதித்த மாமல்லன் said...

உலகத் திரைப்பட அறிமுகம்
ஆன் தெ வட்டர் ஃப்ரண்ட் - எலியா கஸான் 1954
http://madrasdada.blogspot.com/2010/08/blog-post_21.html

Bruno said...

சினிமா தொடர்பான இடுகைகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியுமா, முடியாதா

Bruno said...

அப்புறம்

திரைமணம் திரட்டியா (aggregator) நூற்குறி (bookmark) சேவையா

திரைமணம் said...

சினிமா தொடர்பான இடுகைகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியுமா, முடியாதா

***************

இணைக்க முடியும். ஆனால் முகப்பில் தெரியாது (இன்னும் இந்த மாற்றம் செய்யப்படவில்லை)

திரைமணம் said...

திரைமணம் திரட்டியா (aggregator) நூற்குறி (bookmark) சேவையா

*****

திரைமணம் - திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவை

நன்றி...

திரைமணம் said...

இதே போல ஈழம், இலங்கை சார்ந்த செய்திகளுக்கும் தனிப் பிரிவு உருவாக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

******

ஈழம் தொடர்பான இடுகைகளை தனிப்பக்கத்தில் தற்பொழுது வாசிக்க முடியும்.

http://www.tamilmanam.net/eelam


தனி தளம் குறித்து பரிசீலனை செய்வோம்.

நன்றி...

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு முடிவு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லமுயற்சி.. வெற்றிபெற வாழ்த்துகள்.

Thekkikattan|தெகா said...

இந்த அவசியமான முடிவினை வரவேற்று வாழ்த்துக்கிறேன்...

ஜோதிஜி said...

பலரும் அடித்த கல்லில் மாங்காய் பழமாக மாறி இப்போது விழுந்துள்ளது. திரையை மட்டும் சுவைத்துப் பழகியவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

ராஜவம்சம் said...

அடுத்த மைல்கல் வாழ்த்துக்கள்.

Unknown said...

வெற்றிபெற வாழ்த்துகள்.
A

Bruno said...

//இணைக்க முடியும். ஆனால் முகப்பில் தெரியாது//
சூப்பர் !!!!

Bruno said...

//திரைமணம் - திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவை

நன்றி... //

ஹி ஹி ஹி

--

நீ வெஜ்ஜா நான் வெஜ்ஜா
நான் வெஜிடெரியன் சாப்பிடும் நான் வெஜ்

--

சரி சரி சரி
பிழைத்து போங்கள்

--

nucleus... RIP

Anonymous said...

communist களுக்கு என்று ஒரு பிரிவு இருந்தால் நலம்.... வாசகர்கள் நிம்மதி அடைவார்கள்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிகச் சிறந்த முடிவு.

நன்றியும் வாழ்த்துகளும்.

திரைமணம் said...

இணைக்க முடியும். ஆனால் முகப்பில் தெரியாது (இன்னும் இந்த மாற்றம் செய்யப்படவில்லை)

********

மறுமொழிகள் சேவை, PDF கோப்பு சேவை போன்ற வசதிகள் அனைத்து பதிவுகளுக்கும் உண்டு. பரிந்துரை, அண்மைய இடுகைகள் போன்ற பகுதிகளில் மட்டும் தெரியாது என்பதாக புரிந்து கொள்ளவும்

நன்றி...

Anonymous said...

When a Software Developer becomes a Doctor..., Patients can suffer

When a Doctor acts as he knows technology what will happen ? Dr.Bruno type comments will appear :)))

Sasi

Unknown said...

congrats

ஆடுமாடு said...

congrats

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைத்தமிழன்,ராம்ஜி சொன்னதை வழிமொழிகிறேன்.சினிமாப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.

- யெஸ்.பாலபாரதி said...

நல்ல முடிவு. அதிலும் //ஆரம்பமாகத் தரமான படங்களை எந்த மொழியானாலும் முன்னிலைப் படுத்துவதையும், மாற்றுத் திரைப்படங்களையும், குறும்படங்களையும் தனி வெளிச்சம் காட்டி ஆதரிப்பதையும் திரைமணம் செய்யவிருக்கிறது.// இது!

வாழ்த்துகள்.

Bruno said...

//When a Software Developer becomes a Doctor..., Patients can suffer//

அதில் சந்தேகமே கிடையாது

//When a Doctor acts as he knows technology what will happen ? Dr.Bruno type comments will appear :)))//

நான் கூறியதில் என்ன தவறு என்று சுட்டிக்காட்டினால acts as he knows technology ஆ அல்லது knows technology better than so called software engineersஆ என்பதை தெளிவு பெற உதவியாக இருக்கும்



Sasi

தமிழ் சசி | Tamil SASI said...

Dr.Bruno,

Let me take this chance and explain how Thiraimanam works.

As everyone knows, Thiraimanam is based on Pligg an open source bookmarking software. But...Our technical team customized the pligg software for our needs. We added the following customization on top of pligg.

- An aggregator on top of the Pligg
- A voting process on top of the Pligg voting process to sync up pligg votes with tamilmanam votes

The Aggregator functionality runs in the background scheduled by means of cron and aggregates cinema based posts every 5 mins and adds it to thiraimanam. We created a specific userid called automatic_aggregation for this
purpose.

You can see in the "upcoming" section many posts are added by the user -
automatic_aggregation.

The aggregating script aggregates the posts and adds it into thiraimanam using the userid
automatic_aggregation. Once it aggregates the posts, the posts will appear in the upcoming
section. So, unlike other pligg based websites, you don't have to come every time and add your new cinema based post in thiraimanam. Thiraimanam will aggregate it automatically. Only condition is your posts should have proper tags like 'Cinema', 'திரைவிமர்சனம்' etc.,

Once the posts are added in the upcoming section, from that point on, thirimanam acts like a bookmarking software. Users vote for it and based on the votes the posts gets promoted to front page.

That's what we meant by "திரைமணம் - திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவை".

Obviously your following comment indicates that you did not understand these, even though the blog post has outlined it. That's not a problem. You are a Doctor and not a technical person. Installing wordpress or blogger templates does not make anyone a technical person. These are beginner stuff. Software developers go further to understand the PHP behind these software, tweak the softwares and even write additional classes and modules to customize for our specific purpose. Though these are not rocket science, a beginner can't become an expert :)))

First they have to at least understand the technical context of the wording without thinking softwares are just installation :))

There is no fixed definition for any softwares. We can customize any software according to our
needs as long as we know how to write code in that language..

thanks,
Sasi

Unknown said...

வரவேற்கத் தக்க முடிவு.
வாழ்த்துக்கள்

Amudhavan said...

தவிர்க்கமுடியாத ஒரு ஏற்பாடு இது. வாழத்துக்கள். அப்படியே சிலர் குறிப்பிட்டிருப்பதுபோல் வேறு சில பொருட்களுக்கும் தனித்திரட்டி ஏற்படுத்துவதும் நல்லதே. எல்லாவற்றையுமே இயந்திரம் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிட்டால் மிகமிக சாதாரண மற்றும் மலிவான எழுத்துக்கள் நான்கைந்து நாட்கள் திரட்டியில் இருப்பதும் பல நல்ல விஷயங்கள் அரை மணியில் அகன்றுவிடுவதையும் தவிர்ப்பதற்கு ஏதேனும் செய்தீர்கள் என்றாலும் நன்மையாக இருக்கும். நான் கூட வெறும் எழுத்து பற்றித் தெரிந்தவன்தானே தவிர மென்பொருள் பயன்பாடு பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. தமிழ்மணம் மென்பொருள் வல்லுநர்களின் பயன்பாட்டுத்தளமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். தங்கள் முயற்சிக்கும் சேவைகளுக்கும் மறுபடியும் என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

mokkai

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறந்த முடிவு.

நன்றியும் வாழ்த்துகளும்.

Bruno said...

அன்பின் சசி

//Software developers go further to understand the PHP behind these software, tweak the softwares and even write additional classes and modules to customize for our specific purpose. Though these are not rocket science, a beginner can't become an expert :)))//

கணினியை பொருத்தவரை நான் கைநாட்டு என்று ஏற்கனவே பல இடங்களில் தெளிவாகவே விளக்கிவிட்டேன். சொல்லப்போனால் நான் 12ஆம் வகுப்பில் கூட கணினியியல் கற்கவில்லை, உயிரியல். அதனால் தான் எனக்கு சந்தேகம் வருகிறது.

உங்களைப்போன்ற நிபுணர் என்றால் நானே புரிந்து கொண்டிருப்பேனே. ஏன் உங்களிடம் கேட்க வேண்டும்


ஆனால் எனக்கு குழப்பம் ஏற்பட்டதே இந்த பதிலில் தான் - "திரைமணம் - திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவை".

ஒரு வேளை நீங்கள் ”திரைமணம் - தானியங்கியாக இடுகைகளை சேர்த்துக்கொள்ளும் ஒரு நூற்குறி சேவை” என்று சொல்லியிருந்தால் எந்த குழப்பமும் வந்திருக்காது

என்னை போன்ற நிபுணரல்லாத ஆரம்ப நிலை கணினி பயனாளரை பொருத்து வரை ”திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவை (a book marking service with aggregator facilities)” என்பதும் ”தானியங்கியாக இடுகைகளை சேர்த்துக்கொள்ளும் ஒரு நூற்குறி சேவை (a book marking service that adds Posts Automatically)” வேறு என்றே நினைக்கிறேன். ஒரு வேளை நான் நினைப்பது தவறாக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் கூறியபடி நான் beginner :) :)நிபுணர் அல்ல

அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். தயவு செய்து விளக்குங்கள் !!

திரைமணம் திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவையா (a book marking service with aggregator facilities) அல்லது தானியங்கியாக இடுகைகளை சேர்த்துக்கொள்ளும் ஒரு நூற்குறி சேவையா (a book marking service that adds Posts Automatically) என்பதே என் சந்தேகம்

//First they have to at least understand the technical context of the wording without thinking softwares are just installation :))//

ஏற்றுக்கொள்கிறேன். அது தான் சந்தேகமே.

//There is no fixed definition for any softwares. We can customize any software according to our needs as long as we know how to write code in that language..//

நீங்கள் தற்சமயம் இற்றைப்படுத்தி பயன்படுத்தும் திரைமணம் திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவையா (a book marking service with aggregator facilities) அல்லது தானியங்கியாக இடுகைகளை சேர்த்துக்கொள்ளும் ஒரு நூற்குறி சேவையா (a book marking service that adds Posts Automatically) என்று தெளிவு படுத்தினால் என்னைப்போன்ற beginners அனைவரும் மென்பொருள்கள் எல்லாம் நிறுவுதல் மட்டுமல்ல என்று புரிந்து கொள்ள முடியும (understand the technical context of the wording without thinking softwares are just installation)

என்னைப்போன்ற ஒரு தொழிற்நுட்ப தற்குறிக்கு நேரம் எடுத்து விளக்கியதற்கு நன்றி. இந்த ஒரு சந்தேகத்தையும் விளக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்

அன்புடன்
புருனோ

Bruno said...

//We can customize any software according to our
needs as long as we know how to write code in that language..//

திரைமணம் திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவையா (a book marking service with aggregator facilities) அல்லது தானியங்கியாக இடுகைகளை சேர்த்துக்கொள்ளும் ஒரு நூற்குறி சேவையா என்பது தான் என் சந்தேகமே

--

திரட்டி என்ற சொல் எதை திரட்டினாலும் பொருந்தும் என்பது சரியே. செய்தியோடை திரட்டியும் திரட்டி தான். நூற்குறி சேவையை கூட திரட்டி என்று நீங்கள் கூறினால் அதை மறுக்க முடியாது

ஆனாலும் பொது பயன் பாட்டில் அது செய்தியோடை திரட்டி என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது (பழம் என்றால் அது வாழைப்பழம் என்பது போல்) நானும் அந்த அர்த்ததிலேயே [செய்தியோடை திரட்டி - Feed Aggregator - தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, தேன்கூடு போல்]

ஒரு வேளை நீங்கள் பொதுவான திரட்டி என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம். நான் அதை செய்தியோடை திரட்டி என்று தவறுதலாக நினைத்திருக்கலாம்

--

நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள்... தவறு என் பக்கம் தான்

--

Bruno said...

எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

Bruno said...

அன்பின் சசி

எனது கேள்வியில் இருந்த நக்கல் உங்களை புண்படுத்தியிருக்கக்கூடும்

மன்னித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
புருனோ

தமிழ் சசி | Tamil SASI said...

அன்புள்ள புருனோ,

என்னுடையக் கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் நீங்களும் என்னை மன்னிக்கவும்.

அடுத்த மறுமொழியில் சில விளக்கங்களை அளிக்கிறேன்.

நன்றி....

தமிழ் சசி | Tamil SASI said...

திரைமணம் திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவையா (a book marking service with aggregator facilities) அல்லது தானியங்கியாக இடுகைகளை சேர்த்துக்கொள்ளும் ஒரு நூற்குறி சேவையா என்பது தான் என் சந்தேகமே

திரட்டி என்ற சொல் எதை திரட்டினாலும் பொருந்தும் என்பது சரியே. செய்தியோடை திரட்டியும் திரட்டி தான். நூற்குறி சேவையை கூட திரட்டி என்று நீங்கள் கூறினால் அதை மறுக்க முடியாது

ஆனாலும் பொது பயன் பாட்டில் அது செய்தியோடை திரட்டி என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது (பழம் என்றால் அது வாழைப்பழம் என்பது போல்) நானும் அந்த அர்த்ததிலேயே [செய்தியோடை திரட்டி - Feed Aggregator - தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, தேன்கூடு போல்]

ஒரு வேளை நீங்கள் பொதுவான திரட்டி என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம். நான் அதை செய்தியோடை திரட்டி என்று தவறுதலாக நினைத்திருக்கலாம்

**************

From my prespective, these are not major points of contention. As i said, we can add any functionalities on any software. As long as we know that langauge and have the ability to add additional modules and classes.


Pligg ஒரு book marking service. ஆனால் அது ஒரு அடிப்படை மென்பொருள். அதனைக் கொண்டு அதில் மேலும் சில வசதிகளை புகுத்தி நமது தேவைக்கு ஏற்றாற்ப் போல மாற்றிக் கொள்ள முடியும். எந்த மென்பொருளையும் அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதன் அடிப்படை மாறாது. கூடுதல் சேவையாகவே நாம் செய்யும் மாற்றம் இருக்கும். திரைமணம் அடிப்படையில் ஒரு book marking service. கூடுதல் சேவையாக திரட்டும் வசதியும் உள்ளது. திரட்டும் வசதி என்னும் பொழுது செய்தியோடைக் கொண்டு தான் திரட்ட முடியும். திரைமணமும் செய்தியோடையைக் கொண்டு தான் திரட்டுகிறது. எல்லா செய்தியோடயையும் திரட்டி அதில் உள்ள சினிமா சார்ந்த இடுகைகளை மட்டும் திரைமணத்தில் இணைக்கிறது. அதனால் தான் திரைமணம் - திரட்டி வசதியையும் கொண்ட ஒரு நூற்குறி சேவை.

இதனை பிற மென்பொருள்கள் உடன் கூட பார்க்க முடியும். உதாரணமாக Drupal என்ற மென்பொருளை எடுத்துக் கொள்வோம். அடிப்படையில் அது வெறும் "Content Management System" அவ்வளவு தான். ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு இதழாக (Magazine), Social Community website (just like Facebook or orkut) போல மாற்றிக் கொள்ளலாம். Drupalஐ கொண்டு drigg என்ற book marking சேவையை செய்திருக்கிறார்கள். இது Pligg போன்ற ஒன்று. இப்படி நிறைய உள்ளது...

கேள்விகளுக்கு நன்றி...

அன்புடன்,
சசி...

Post a Comment